Friday 25 March 2016

யந்திரம் எழுதும் முறை

LESSON 2


             மாந்திரீக கலையில் நிச்சயமாக நாம் யந்திரம் எழுத கற்றுக்கொள்ள வேண்டும் யந்திர எழுத்துக்கள்தான் நமக்கும் நாம் வணங்கும் தெய்வத்திற்கும் ஒரு தொடர்பு ஏற்படுத்துகிறது .யந்திரம் இல்லாமல் மாந்திரீகம் இல்லை ஒரு சில மந்திரங்கள் மட்டும் யந்திரங்கள் இல்லாமல் செயல்படும் .

யந்திரங்கள் பல வடிவங்களில் கிடைக்கும் அதில்.... 


  • நாம் யந்திரங்கள் எழுதுவதற்கு முன்பே சரியான அளவில் யந்திரத்தை வெட்டி வைத்து கொள்ள வேண்டும் .
  • யந்திரம் எழுதிய பிறகு எக்காரணம் கொண்டும் வெட்டவோ கிழிக்கவோ கூடாது 
  • யந்திரம் எழுத செம்பு கம்பியை எழுத்தாணி போன்று கூர்மையாக உருவாக்கி பயன்படுத்த வேண்டும் 
  • யந்திரங்கள் எதற்காக எழுதுகிறோமோ அதற்கான உலோகம் எது அதற்கான திசை அறிந்து பட்சி  ஹோரை நேரங்கள் சரியாக பார்த்து யந்திரங்கள் எழுத ஆரம்பிக்க வேண்டும் .
  • யந்திரங்கள் செம்பு ,பித்தளை, காரியம் ,இரும்பு ,பனை ஓலை ,தங்கம் ,ஐம்பொன் ,வெள்ளி ,போன்ற உலோகங்களில் எழுதலாம் .
  • யந்திரம் எழுதிய பிறகு விளக்கு ஒளியில் கூர்மையாக வைத்து பார்க்க வேண்டும் எக்காரணத்தை கொண்டும் யந்திரத்தில் ஓட்டையோ கிழிசலோ விழக்கூடாது .
  • எந்த ஒரு காரியத்திற்கும் யந்திரத்தை முன் கூட்டியே எழுதி வைக்க கூடாது .என்ன விசயத்திற்காக நாம் யந்திரம் எழுதுகிறோமோ அதை உணந்து மனதில் வைத்து யந்திரம் எழுத வேண்டும் .
  • யந்திரங்களில் ஏதேனும் தவறுகள் நிகழ்ந்தால் அல்லது ஓட்டை விழுந்தால் அந்த யந்திரத்தை ஓடும் நீரில் அல்லது கடலில் போட்டு விட வேண்டும் .

இனி பின்வரும் பாடங்களில் யந்திரம் எழுத என்ன மந்திரங்கள் பயன்படுத்த வேண்டும் ,சாபநிவர்த்தி செய்வது எப்படி என்று விபரமாக குறிப்பிடுகிறேன் .

2 comments:

  1. Best effort thanksto your kind help. To solve the problems by spritual

    ReplyDelete