Saturday, 15 July 2017

கணவன் மனைவி வசிய திலகம் ,மோகினி வசியம்

கணவன் மனைவி வசிய திலகம் : 

கணவனை வசியம் செய்ய பெண்களுக்கு மேற்கண்ட மந்திரத்தை ஒரு தம்பாளத்தட்டில் மஞ்சள் அல்லது குங்குமம் பரப்பி மேற்கண்ட யந்திரத்தை ஊதுவத்தியால் எழுத வேண்டும் .எழுதி அதற்கு மூலமந்திரத்தை 1008 உருக்கள் ஜெபித்து அந்த  மஞ்சள் அல்லது குங்குமம் நெற்றியில் வைத்தால் வசியமாவார்கள் .

மோகினி வசியம் ,வேறுமுறை    

ஒரு சில குடும்பங்களில் கணவன் மனைவி ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடு கொண்டிருப்பார்கள்  ,இதனால் குடும்ப வாழ்க்கை எதோ நரகத்தில் வாழ்வது போலவே இருக்கும் .இதற்கு மறைமுகமாக பல வழிகளில் சரி செய்யலாம் கிராம்பு பொதுவாகவே வைத்தியத்திலும் உணவுகளிலும் முக்கிய பங்கு வகுக்கிறது, இந்த கிராம்பை பயன் படுத்தி வசிய வித்தைகள் செய்ய முடியும்                உப்பு , இனிப்பு பொருட்கள் , கிராம்பு
இந்த பொருட்களில் மந்திரங்கள் ஜெபித்து கொடுத்தால் உடனடியாக நிறைய மாற்றங்களை காண முடியும் இந்த பொருட்களை வாங்கி வீட்டில் இருந்து ஜெபிக்க வேண்டிய மந்திரம்

இதற்கான மந்திரம் :

ஓம் நமோ பகவதே சர்வலோக மோகய மோகய சுவாக .
வீட்டில் உள்ளவர்கள் மது மாமிசம் உண்ணாமல் மந்திரம் ஜெபிக்க வேண்டும் 1000 உருக்கள் ஏற்றலாம் .

தாந்திரீகர்கள் பயன்படுத்தி மந்திரிக்க வேண்டிய மந்திரம் :
ஓம் மோகினி தேவி வஜ்ரேஸ்வரி காம் மாலினி மம பிரியந்தம் ஆகர்சய ஆகர்சய சுவாகா .

இந்த மந்திரம் ஜெபிக்கும் பொது நெய்விளக்கு ஏற்றி வைத்து வடக்கு முகமாக அமர்ந்து கொண்டு ஜெபிக்க வேண்டும் கையில் நீலக்கல் ஜெப மாலை அல்லது நீல நிற ஸ்படிக மாலை பயன்படுத்தி 5000 உருக்கள் ஜெபித்தால் நல்ல பலன் உடனடியாக கிடைக்கும் ,காதல் கைகூடும் கணவன் மனைவிக்கும் நல்ல இன்பமான வாழ்க்கை கிடைக்கும் .


மோகினி வசியம்  வேறுமுறை

ஒர் சந்தன தடியில் ரூபம் செய்து பாலினால் அபிஸேகம் செய்து சிகப்பு பட்டுகட்டி கிழக்கு திசை  நோக்கி அமர்ந்து தாம்பூலம்  தேங்காய் உடைத்து  பன்னீர்  தெளித்து பூஜை  செய்து  கீழ்காணும்  மந்திரம் 1008 உரு கொடுக்கவும்..

மந்திரம்

ஒம் மாயா மோகினி ஒம் ஒங்கார மோகினி உமாபுத்திரி ஆனந்த
மோகினி மகா பைரவி மலையாள கன்னி  மந்திர ரட்சினி

நான் சொல்வதை கேட்டு எனக்கு வசமானாய  ஸ்வாகா.

கணவன் மனைவி ஒற்றுமையாய் வாழ மோகினி மந்திர பிரயோகம்

கணவன் மனைவி ஒற்றுமையாய் வாழ மோகினி மந்திர பிரயோகம் ....

கணவன் மனைவி ,சண்டை சச்சரவுகள் நீங்க மோகினி மந்திர உபாசனை பெரிதும் துணை புரியும் .காதல் கை கூட ,நினைத்த வரன் அமைய ,நினைத்த பெண்ணை திருமணம் செய்ய இந்த மோகினி மந்திரம் உதவி செய்யும் .

 மோகினி வசிய யந்திரம்

மூலமந்திரம் :

ஓம் சிவயநம கிரியும் விரியும் 
ஜெகத் மோகனாங்கி வசி வங் சுவாகா 
பூஜை முறை :


மேற்கண்ட மோகினி வசிய யந்திரத்தை அமாவாசை நாளன்று யந்திரம் எழுதி பூஜை துவங்க வேண்டும் .மேற்கண்ட மந்திரத்தை நாளொன்றுக்கு 1008 உரு வீதம் 15 தினங்கள் பூஜை செய்து பௌர்ணமி அன்று முடியும் வகையில் பூஜை செய்ய வேண்டும் .

மோஹினி

மோஹினி 

பெரும்பாலானோர் தான் விரும்பிய பெண்ணை மனைவியாக அடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் .அது ஒரு சில காரணங்களால் தடைபட்டு விடும் அந்த சமயத்தில் சில மந்திர வாதியிடம் சென்று கேட்டால் எல்லாம் வசியம் செய்து விடலாம் என்று கூறி பணம் பறிப்பார்கள் .

ஆனால் அது நடக்குமா என்பது கேள்விக்குறியாகின்றது ஏனென்றால் பெண் வசியம் மற்றும் பெண்ணையோ ஆணையோ ஆகர்சனம் செய்வதற்கும் ஒரு தேவதையின் அருள் இருந்தால் மட்டுமே இந்த சாதனைகளை செய்ய முடியும் 

அது எந்த தேவதை என்றால் அது தான் மோஹினி மோகினியின் அருள் கடாக்ஷம் மட்டும் கிடைத்து விட்டால் எளிதில் எந்த ஒரு பெண்ணையோ ஆணையோ வசப்படுத்தி விடலாம் எங்கு அழைத்து வர வேண்டும் என்று கூறினாலும் அழைத்து வந்து விடும் .

இந்த முறையைத்தான் அக்காலந் தொட்டே பயன் படுத்தி வந்திருக்கின்றனர் இல்லைஎன்றால் யந்திரத்தை வைத்து சாதிப்பது என்பது நூற்றுக்கு ஐம்பது சதவிகிதம் வேண்டுமானால் சாத்தியம் ஆகும் .அது அந்த சாதகனுடைய மனோ சக்தியை பொறுத்தது . 

மாந்திரிகத்தில் மை வித்தைகள் ஒரு சில ஜால வித்தைகள் ஆடுவதற்கும் இந்த மோஹினி யானது பயன் படும் .இந்த முறையை திரு முத்துபாண்டி வைத்தியரிடம் கேட்டுதான் நான் தெரிந்து கொண்டேன்  இது அவருக்கு கைகண்ட முறை .இந்த மாதிரி ரகசியங்களை யாரும் வெளியிட மாட்டார்கள்.

இந்த மோஹினி தேவதையால் என்னவெல்லாம் செய்யலாம் என்றால்

ஆண் பெண் வசியம் 
ஆண் பெண் பிரிவு 
ஆண் பெண் அழைப்பு வித்தை 
கனவில் விந்து வெளியாவதை சரி செய்யலாம் 
பேய் பிசாசு பிரச்சனைகளை தீர்க்கலாம் 

இன்னும் அநேக காரியங்கள் செய்யலாம் .

கருங்குட்டி உபாசனை :

கருங்குட்டி உபாசனை :

இந்த கருங்குட்டி உபாசனை வைத்திருப்பவர்கள் அவர்கள் நினைத்த காரியத்தை எளிதில் சாதித்து விடலாம் .அவர்களுக்கு எதிரியே இருக்க மாட்டார்கள் .எதிரியை இல்லாமல் செய்து விடும் .

முத்து பாண்டி வைத்தியருடைய தகப்பனார் இந்த கருங்குட்டி உபாசி கொஞ்ச நாட்கள் வைத்திருந்தார் அதற்கு பிறகு இந்த உபாசனையால் தனது தேவைக்காக ஒரு சில காரியத்தை செய்து விட்டு அதன் எதிர் விளைவுகள் நமது குடும்பத்தை தாக்கும் இந்த குட்டியை ஏவல் செய்து விட்டால் அதில் ஒரு சில ஏவல் மறுபடியும் திருப்பி நம்மை வந்து தாக்கும் ,நாம் பலமானவர்களாக இருப்பதனால் நமது குழந்தை குடும்பம் என்று அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அதனால் அவர் இளமைக்காலத்தில் பயன் படுத்தி இருக்கிறார் .ஒரு சில பாதிப்புகளுக்கு பிறகு விட்டுவிட்டார் .

கருங்குட்டி என்னவெல்லாம் செய்யும் :

இந்த கருங்குட்டி வைத்து ஒரு பொருளை நாம் கையால் தொட்டு விட்டு வந்தால் போதும் அந்த பொருள் அன்று இரவே நம் வீட்டில் இருக்கும் அந்த காலத்தில் களவு செய்வதற்காக பயன்படுத்தியிருக்கிறார்கள் .

அப்போது நெல் அறுவடை செய்து களத்திலே போட்டிருப்பார்கள் அந்த நெல்லில் ஒரு பிடியளவு கையில் எடுத்து வந்தால் இந்த குட்ட்யானது ஒரு மூடை நெல் கொண்டு வந்து கொட்டி விடும் .

இந்த கருங்குட்டியை அந்த காலத்தில் கேரளத்தில் அதிகமானோர் பயன் படுத்தி வந்ததாகவும் அங்கிருந்துதான் வாங்கியதாகவும் கூறினார்கள் .இப்போதும் கூட ஒரு சில இடங்களில் பயன் படுத்தப்பட்டு வருகிறது .தமிழகத்திலும் மலைஜாதியினர் பயன்படுத்துகின்றனர் .இதைவைத்து ஜால வித்தைகள் அனைத்தும் ஆடலாம் .வசியம் பிரிவு அழைப்பு வித்தைகளையும் செய்யலாம் .

கேரளத்தில் இந்த குட்டியை வைத்து உபாசனை செய்பவர்கள் ஊர்ப்புறங்களில் வசிப்பதில்லை காடுகளில்தான் வாழ்கிறார்கள். இதற்கான மந்திர யந்திர பிரயோகங்கள் கூட எட்டில் எழுதப்பட்டிருந்தன. மாந்திரீகத்தில் இந்த கருங்குட்டி நினைத்ததை சாதிக்க பயன்படுகிறது . இதனால் ஜென்ம வினை அதிகரிக்கிறது. இந்த கருங்குட்டி உபாசனையை பயன்படுத்தினால் நிகழ்காலத்தில் நாம் நினைத்த வண்ணம் வளமோடு வாழலாம் . 



கைக்கருப்பு என்ற குட்டி:

சூதாட்டத்தில் தினம் பல கோடிகணக்கில் சூதில் பணம் கிடைக்கின்றன நாம் அண்டை நாடுகள்ளன மலேசியா,சிங்கப்பூர்,சீனாவில் சூதடத்தில் தினம் பல கோடிகணக்கில் சூதில் பணம் கிடைக்கின்றன.

இந்த சூதில் சீனர்கள் பலகோடி பணம் தினம் அடிகின்றனர் . இதற்கு முக்கியமான காரணம் அவரிடத்தில் உள்ள மந்திரக சக்திதான் முக்கிய காரணம். இந்த சக்தி என்னவென்று தெரியுமா. நம்முடைய சாஸ்திரத்தில் மறைக்கபட்ட  அதிபயங்கர தேவரகசியம் கைகருப்பு என்னும் அதிக சக்தி கொண்ட மாந்திரீக  சக்தி தான் .

கைக்கருப்பு என்றால் என்ன 

பல உயிரினங்கள் கரு சக்தி கொண்டு மந்திர யந்திர மூலிகைகள் பிரயோகம்  மூலமாக மாந்திரீக குருக்கள் தங்கள் தவசக்தியை பயன்படுத்தி ஒரு அதிசய உயர்ந்தசக்தியை படைப்பார்கள். இந்த மாந்திரீக மகா உயரின சக்தி கைக்கருப்பு ஆகும்.  இந்த கைக்கருப்பு மிக வலிமையான பலம் படைத்தது. கைகருப்பு ஒரு பொருளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பொருளை கொண்டு செல்லும்.பூ ,பழம் குங்குமம். ஆகியவையும் தரும். சூதில் நாம் நினைத்த ஒரு இடத்தில் பகடையை வைக்கும் . அனைத்து செயல்கள் செய்யும்

பலவகையான கைக்கருப்பு உள்ளது

பொளிவாரி கருப்பு
தவாசு கருப்பு
தானிய கருப்பு
பஞ்சமல கருப்பு
குட்டி கருப்பு
மலக் கருப்பு


இந்த வகையான கைக்கருப்பு   உணவு முறைகள் படையல் முறைகள் வேறுபடும் சில கைக்கருப்பு அசைவம், சைவம் என இருவகைப்படும் சைவகருப்பு அவுல் ,பொறி ,கடலை,பன்னீர் முதலியவைகள் அசைவகைக்கருப்பு கோழி இறைச்சி, மாடு இறைச்சி, பன்றிகள் இறைச்சி போன்ற உணவு முறைகள்.

Thursday, 29 December 2016

பாலகிரகத் தோஷம் நீக்கும் மூலிகை

நிறைய வீடுகளில் குழந்தைகள் இருக்கும் இந்த குழந்தைகள் மட்டும் ஏன் அழுகிறது எதற்காக அழுகின்றது என்று பெற்ற தாயாராலே கண்டுபிடிக்க முடியாத ஒரு சூழ்நிலையில் பல குடும்பங்கள் தத்தளிக்கின்றது .அதற்கு காரணம் என்ன என்றால் அவர்களுக்கு இந்த யந்திர மந்திரங்களின் மேல் நம்பிக்கை இல்லாததுதான் காரணம் .

எங்கள் அனுபவங்களை கூறுகிறோம் 

சிறு குழந்தைகள் திடீர் திடீர் என பயந்து அழுது விடும் அந்த இடத்தில் யாரும் வந்து பயம் காட்ட கூடிய வாய்ப்பே இல்லை ஆனாலும் குழந்தை அழுகின்றதே ஏன்? ,

அடுத்து இரவு நன்றாக குழந்தை தூங்கி கொண்டிருக்கும் பொது திடீர் என அழும் .திடீர் என பேதி ஆகும் அதற்கு மருத்துவரிடம் காண்பித்தால் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறுவார்கள் .


இப்படி எதனால் ஆகிறது என்றால் இளம் குழந்தை மனோதிடம் இல்லை எந்த ஒரு தேவதையும் வந்து உடலின் உள்ளே ஏறி பல இன்னல்களை கொடுக்கும் அடிக்கடி நோய் வந்துகொண்டே இருக்கும் .இதனைத்தான் பால கிரக தோஷம் ,பாலாரிஷ்டம் என்று கூறுவார்கள்

1 நாள் 1 மாதம் 1 ஆண்டு -நாயுருவி வேர்

2 நாள் 2 மாதம் 2 ஆண்டு -தூ துவளை வேர்

3 நாள் 3 மாதம் 3 ஆண்டு -முருங்கை வேர்

4 நாள் 4மாதம் 4 ஆண்டு -நந்தைச்சூரி வேர்

5 நாள் 5 மாதம் 5 ஆண்டு -ஓர் இதழ் தாமரை வேர்

6 நாள் 6 மாதம் 6 ஆண்டு-குப்பைமேனி வேர்

7 நாள் 7 மாதம் 7 ஆண்டு-வில்வமரவேர்

8 நாள் 8 மாதம் 8 ஆண்டு-ஊமத்தைவேர்

9 நாள் 9 மாதம் 9 ஆண்டு-மூ ங்கிரட்டை வேர் 

1 0 நாள் 1 0 மாதம் 1 0ஆண்டு -நில ஆவாரை வேர்

1 1 நாள் 1 1 மாதம் 1 1 ஆண்டு-எருக்கன் வேர்

1 2 நாள் 1 2 மாதம் 1 2 ஆண்டு-வட்டகிலுகிலுப்பை வேர்

1 3 நாள் 1 3 மாதம் 1 3 ஆண்டு-வட்டகிலுகிலுப்பை வேர்

1 4 நாள் 1 4 மாதம் 1 4 ஆண்டு-குட்டிவிளாத்தலை வேர்

1 5 நாள் 1 5 மாதம் 1 5 ஆண்டு-திருநீற்றுப் பச்சை வேர்

1 6 நாள் 1 6 மாதம் 1 6 ஆண்டு -கஞ்சாங்கோரை வேர்

மேற்கண்ட நாள்,மாதம்,ஆண்டுகளில் வரும் பாதிப்புகளுக்கு மேற்கண்ட மூ லிகை தாயத்து போட்டால் சுபம் ஏற்படும்.

லக்ஷ்மி வசிய கலசம்

பணவரவு உண்டாக 



நம்வீட்டில் லக்ஷ்மி குடியிருந்து நமக்கு அருள ஒவ்வெருவரும் நம்வீட்டில் லட்ஷிமி குடியிருந்து நமக்கு அருள வேண்டும் என்று ஆசை படுவோம் ஆனால்  அதற்க்குன்டான முறைகளை செய்வதில்லை அப்படியே செய்தாலும் முறையாக செய்வதில்லை

ஒரு சிறிய மண்கலசம்(மூடியுடன்) எடுத்துஅதில் சிறிது

உப்பு, சர்க்கரை, 
பச்சரிசி, புளி,
பருப்பு,நவ தானியம், 
புனுகு, குங்கும பூ,
கஸ்துரி, ஜவ்வாது,
ஐம்பொன், சிறிய வலம்புரிசங்கு, 
வெற்றிலை பாக்கு,

இவை அனைத்தயும் வியாழக்கிழமையே வாங்கி வைத்துக்கொள்ளவும் வெள்ளிகிழமை  காலை 6 முதல்  7 மணிக்குள்மேற்கூறிய அனைத்து பொருளையும்கலசத்தில் இட்டு மண்கலசத்திற்க்க விபூதிபட்டையிட்டு சத்தனம் குங்குமம்வைத்து உங்கள் பூஜை அறையில் வைத்து மகாலட்சுமியை மனதாற வேண்டி தாயே நீ என்றும் என்குடும்பத்தில் இருந்து அருளவேண்டும் என பிராத்தனை செய்து விட்டு தூப தீபம் காட்டி பின்வரும் மந்திரத்தை 108முறை கூறி பின் கலசத்தை மூடி பூஜையறையில்வைக்கவும், வெள்ளிக்கிழமை தோறும் 108 முறை மந்திரம்கூறி வணங்க வேண்டும், மண்கலசம் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை, முதல் முறை வணங்க தொடங்கியதும் அடுத்த வெள்ளிகிழமைக்குள் பணவரவு உயர்வதை கண்கூடாக உணரலாம்இந்த எளிய பரிகார முறையை செய்து வாழ்வில்வளம் பெற வேண்டுகிறேன்,

108முறை கூற வேண்டிய மந்திரம்

ஒம் தன தான்ய லஷ்மியை வசி வசி வசியை நமஹ

இந்த சக்தி வாய்ந்த மந்திரத்தை கூறி பயன் பெற வாழ்த்துக்கள.

மகாலக்ஷ்மி வசியம் உண்டாக ரகசிய பரிகாரம்



வெள்ளிகிழமை இரவு 8-9 மணியளவில் ஒரு மனையில் குங்குமத்தினால் 'ஸ்ரீம்' என எழுதி அதை சுற்றிலும் 6 மண் அகலில் சுத்தமான நெய் சேர்த்து பின்பு குங்குமத்தை நீரில் குழைத்து அதில் நனைக்கப்பட்ட தாமரை தண்டு திரியினை கொண்டு விளக்கேற்றி 'ஸ்ரீம்' மந்திரத்தை மனதினுள்ளே ஜபம் செய்து கற்கண்டு நிவேதனம் செய்யவும்.

பின்பு நிவேதனத்தை அப்படியே வைத்திருந்து மறு நாள் 9 வயதுக்குட்பட்ட ஐந்து பெண்களுக்கு அதை கொடுக்கவும். மீதம் இருப்பததை வீட்டில் உள்ள அனைவரும் உண்ணலாம்.

தொடர்ந்து வீட்டில் உள்ள எவரேனும் இதை 21 வெள்ளிகிழமைகள் செய்து வர 'லக்ஷ்மி கட்டு' எனப்படும் சதா பணகஷ்ட நிலைமை அடியோடு அழிந்து நிதி நிலை மேம்படும்.

இந்த 21 வாரங்களும் அசைவ உணவு சேர்க்காமல் இருப்பின், ஆரம்பித்த ஓரிரு வாரங்களிலேயே மிக நல்ல முன்னேற்றம் தெரியும்.

'லக்ஷ்மி கட்டு' ஏற்பட்டு அழிந்த பல குடும்பங்களை மீண்டும் முன்னேற்றி நல்ல நிலைக்கு கொண்டு வந்துள்ளது சக்தி வாய்ந்த இந்த பரிகாரம்

வசிய சூட்சம ரகசியங்கள்

வசி வசி என்று தினம் செபித்தாயானால் மகத்தான சகல பாக்கியமும் உண்டாகும் என்றார்கள் நம் சித்தர்கள்.

வசியம் என்பதே வலிமை வாய்ந்த ஒரு மாய சொல்லாகும். இந்த சொல் யாரை எல்லாம் ஆட்டி படைக்கிறது  என்று பார்ப்போம்.

நம் வாழ்க்கையில் பல்வேறு நிலைகளில் மற்றவர்கள் மீது அன்பு செலுத்துகிறோம். அந்த அன்பு அங்கே அடிபட்டு போகிறபோது, சிலர் குறுக்கு வழியில் கையில் எடுப்பதுதான் இந்த வசியம்.

ஒரு தாய் தன் மகன் மீது அன்பு செலுத்துகிறாள். அந்த அன்புக்கு போட்டியாக மருமகள் என்பவள் வந்து தன்னை உதாசீன படுத்தும்போது அவர்கள் இருவரையும் தன் கட்டுக்குள் கொண்டுவர அவள் கையில் கொண்டு வரும் ஆயுதம்தான் இந்த வசியம்.

கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணின் மைந்தருக்கு மாமலையும் கடுகளவாம் என்கிறார் பாரதிதாசன்.

அந்த கடை கண் பார்வை தனக்கு கிடைக்காத போது, அந்த இளைஞனின் கண்ணில் படுவதுதான் இந்த வசியம் என்கிற போர் ஆயுதம்.

ஒரு பெண் தன் கணவன் மீது மாறாத அன்பு வைத்திருக்கிறாள். அவனுக்கு வேறு தொடர்பு ஏற்பட்டு தானும் தன் குடும்பமும் சீரழிக்கப்படும் போது, என்ன விலை கொடுத்தாவது அவனை தன் வழிக்குள் கொண்டுவர அவள் கையில் எடுக்கும் ஆயுதம்தான் இந்த வசியம் என்ற A .K .47 .

பங்காளி பழிஎடுப்பான் என்பார்கள். பங்காளியால் மட்டும் அல்ல, மற்ற எதிரிகள் தொல்லையாலும், பாதிக்கபடுகிற பொழுது மனதளவில் பாதிக்க படுகிற போது, அவர்களை அழிக்க தங்கள் கையில் ஏந்துகிற ஒரு வெடிகுண்டு தான் இந்த வசியம்.

தம்முடைய ஆளுமை தன்மை குறைகிற பொழுது மற்றவர்களை தன் ஆளுமையின் கீழ் கொண்டு வருவதற்கான ஒரு மறைமுக  முயற்சியே இந்த வசியம் எனப்படும்.

இதை அத்தனை பேருமே கடைபிடிக்கிறார்கள் என்று சொல்வதற்கில்லை. அதுபோன்ற குறுக்கு வழிகளை நாடி, அதனால் நன்மையோ அல்லது தீமையோ பெறவேண்டும் என்கிற விதியமைப்பு இருக்கிற நபர்கள் மட்டுமே அந்த பக்கம் போகிறார்கள்.

நம் சித்தர் பெருமக்கள் எட்டு விதமான தொழில்களை பற்றி கூறி உள்ளார்கள். இதை அஷ்டகர்மம் என்பர். இவைகளில் ஒன்றுதான் வசியம்.

இனி இதை பற்றி ஆய்வினை தொடங்குவோம். சித்தர்கள் வசியத்தை உலக வசியம், அரசர் வசியம், பெண்டிர் வசியம், மைந்தர் வசியம், பகைவர் வசியம், விலங்கு வசியம் என்று ஆறு வகையாக பிரித்துள்ளனர்.

உலகம், பகைவர் மற்றும் விலங்கு வசியத்திற்கு ஓம் என்ற அட்ச்சரதையும், அரசர் வசியத்திற்கு ஒளம் என்ற அட்ச்சரதையும், மாதர் மற்றும் மைந்தர் வசியத்திற்கு ஐம் என்ற அட்ச்சரதையும் பயன்படுத்தி உள்ளனர்.

வசியத்தை நடைமுறை  வாழ்க்கையில் பயன்படுத்தும் பொழுது

1 . மந்திரம்
2 . யந்திரம் அல்லது சக்கரம்.
3 . மூலிகை
4 . அஞ்சனம் அல்லது மை என்ற நான்கு நிலைகளில் செயலாற்றி உள்ளனர். இனி இவைகளை பற்றி ஆராய்வோம்.

மந்திரம்

குற்றமற்ற மனிதர்களால் உருவாக்கப்பட்ட மறைமொழி என்ற பரிபாஷை சொற்களே மந்திரம் எனப்படும்.

வானலோகத்தில் இருக்கிற தேவர்களையும் அழைக்கிற சக்தி இந்த மந்திரத்திற்கு உண்டு. ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் செய்கிற ஆற்றல் மந்திர எழுத்துகளுக்கு உண்டு.

நமது சித்தர்களும் நமசிவாய என்ற ஐந்தெழுத்தில் இந்த அண்டங்களும் அவற்றின் ரகசியங்களும் அடங்கி இருந்ததை அறிந்திருந்தார்கள்.

நாம் வழிபடுகிற பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளும் மறைந்திருந்ததையும் உணர்ந்து இருந்தார்கள்.

இந்த எழுத்துக்களையே மாற்றி மாற்றி அமைத்து எட்டு விதமான தொழில்களுக்கும் பயன் படுத்தி உள்ளனர்.

ஓம் ஹிரீம் ஐம் கிலீம் சங் வயநமசி என்பது வசியதிற்கான முலமந்திரமாகும்.

இதனை கிழக்கு நோக்கி அமர்ந்து மனதை ஒருநிலை படுத்தி ஒரு லட்சம் முறை செபித்தால் வசியம் சித்தியாகும் என்கிறார்கள் சித்தர்கள்.

கிழக்கு திசை என்பது இந்திரனுக்கு உரியது.  உலகியல் இன்பத்திற்கு உரிய தெய்வம் இந்திரன். 

வசிய ஆற்றலைத்தான் இன்றைய  விஞ்ஞானம் மெஸ்மரிசம் என்று குறுப்பிடும்.

எந்த மந்திரத்தையும் மனதை ஒரு நிலை படுத்தி படிக்கும் போது நமது உடலில் மின்காந்த அலைகளின் சக்தி அதிகரிக்கும். இதை எலக்ட்ரோ மேக்னடிவ் வேவ்ஸ் என்று குறிப்பிடுவார்கள்.

தவவலிமை பெற்றவர்கள் தங்களின் ஆற்றலை எழுத்துக்கள் என்ற அட்சரங்கள் மூலம் தகடுகளில் பதித்து, அதற்க்கு வழிபாட்டின் மூலம் சக்தியை வழங்கி குறுப்பிட்ட காரியங்களுக்கு செயலாற்றும்படி செய்வது யந்திர முறையாகும்.

இந்த தகடுகள் வெள்ளியால் செய்யபட்டால் 22 வருடத்திற்கும், தாமிரம் என்ற செம்பினால் செய்யபட்டால் 12 வருடத்திற்கும், தங்கம் அல்லது பஞ்சலோகத்தால் செய்யபட்டால் ஆயுள் முழுமைக்கும் நன்மைதரும்.

இந்த யந்திர முறையை பல்வேறு சித்தர்கள் பல்வேறு முறைகளில் சொல்லி உள்ளனர்.

நாம் வசியம் என்ற ஒன்றை மட்டும் ஆராய்வோம்.

இந்த சக்கரத்திற்கு ஐங்காயம் பூசி, முல்லை மலர் அணிவித்து, வில்வமர பலகையின் மீது கிழக்கு நோக்கி அமர்ந்து ஓம் வசிமநய என்று லட்சம் முறை உச்சரிக்க வசியம் சித்தியாகும். இது ஒரு முறை.

எண் கரும சக்கரம் முதல் அறுபதிற்கும் மேற்பட்ட சக்கர வகைகள் கூறபட்டுள்ளன. இறைவன் அல்லது இறைவியை உருவமற்ற நிலையில் வழிபாடு செய்வதுதான் யந்திர முறையாகும்.

தவ ஆற்றல் மிக்கவர்களாலும், பற்றற்று வாழ்பவர்களும் தருகிற சக்கரங்கள் மட்டுமே நீண்ட காலம் பலன் தரும்.மற்றவர்களால் எழுதப்படும் எந்த சக்கரமும் ஒரு பலனையும் தராது.

தவநிலையில் மேம்பட்டவர்கள், தங்களின் பயணத்தை பேரின்பம் என்னும் முக்தி நிலையை நோக்கி தொடர்வார்களே தவிர, இது போன்ற காரியங்களில் தங்களின் கவனத்தை சிதற விட மாட்டார்கள்.

அப்படியானால் அச்சடித்த சக்கரங்கள்?

ஐயோ பாவம்..முறையாக உருவேற்றபடாத எந்த சக்கரத்திற்கும் சக்தி இல்லை.

நீங்கள் ஏமாறவும் வேண்டாம், ஏமாற்று காரராகவும் மாற வேண்டாம். நீங்கள் நீங்களாகவே வாழ  முயற்சியுங்கள்.

Sunday, 25 December 2016

பயில்பவர்களுக்குள் எழும் கேள்விகள் ?

இந்த காலகட்டத்தில் ஒரு சிலர் மாந்திரீகம் பயின்று கொண்டு இருக்கின்றனர் அவர்களிடம் நிறைய கேள்விகளுக்கு பதில் தெரியாமல் அலைந்து கொண்டிருக்கின்றனர் .அந்த கேள்விகளை குறிப்பிடுகிறேன் இதற்கான பதில்கள் நம்மிடம் முறையாக பயிபவர்களுக்கு இப்படிப்பட்ட கேள்விகளே அவர்கள் மனதில் எழாது .

  · முறைப்படி பூஜை தொடங்குவது எப்படி இப்போது நான் செய்யும் பூஜைகள் சரிதானா ?

·    ஒரு வீட்டிற்குள் சென்றதும் அங்கு என்ன பிரச்சனைகள் இருகின்றது என்று கண்டறிவது எப்படி?

·       தேவதைகளை சித்தி ஆகிவிட்டதா என்று எப்படி கண்டறிவது ?

·       ஒருவருக்கு வியாபாரம் சரிவர நடக்கவில்லை அதற்கு என்ன காரணம் என்று கண்டறிவது எப்படி?

·       ஒருவருக்கு எதிரியால் தினமும் தினமும் தொல்லை அதை சரி செய்ய என்ன கொடுக்க வேண்டும் ?

· ஏவல் பில்லி சூன்யம் அப்படியெல்லாம் கூறுகிறார்களே அது  உண்மையா?
·       பேய் விரட்டுவது எப்படி அதற்கு என்ன செய்ய வேண்டும் ?

·       எந்தெந்த தேவதைகளுக்கு எப்படியெல்லாம் நைவேத்தியம் படைக்க வேண்டும் ?

·    நாம் மந்திரம் சித்தியாகும் சமயம் நம்மிடம் என்னவெல்லாம் இருக்க வேண்டும் ?

·       சித்தி ஆன பிறகு எப்படி அந்த தேவதையை கையாள வேண்டும் ?

· எந்த தேவதைகளாலும் நமக்கு ஆபத்துக்கள் வராமல் பாதுகாப்பது எப்படி?

· ஒரு கோயிலுக்கு சென்றால் அங்கு என்னென்ன தெய்வங்களின் பீடங்கள் எங்கெங்கே இருக்கின்றன என்று சொல்வது எப்படி?

·       ஏவல் பிரச்சனைகளை கண்டறிவது எப்படி?

·       அஞ்சன மைகள் தயாரிப்பது எப்படி?

· ஒருவர் ஏதேனும் பிரச்சனைகளுக்காக வந்தால் அதை கையாளுவது எப்படி ?

·       ஒரு தேவதை சித்தி ஆக எத்தனை நாட்கள் எடுக்கும் ?

·       வசிய வித்தைகளில் வெற்றியடைய என்ன செய்ய வேண்டும் ?

·       மாந்திரீகம் அழிவு வித்தை என்று கூறுகிறார்களே அது உண்மையா ?

·       நிறைய பேரிடம் படித்த வித்தைகள் பலிக்க வில்லை ஏன் ?

இன்னும் பல கேள்விகள் எழும் அதில் சிலவற்றை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன் ,இந்த கலையை யாரும் எழுத்தில் சொல்லித்தர முடியாது நானும் பயிற்சி தருவதாக சொல்லி ஒரு வருடம் ஆகியும் என்னால் கொடுக்க முடிய வில்லை ஏனென்றால் அதற்கும் ஒரு சில பதில்களுக்காக காத்திருந்து அதற்கு பிறகு கொடுத்தால் மட்டுமே எல்லோருக்கும் நல்லதாக அமையும் .

நமக்குள் எழும் கேள்விகள் ?

மாந்திரீக வைத்திய வித்தைகளை பொறுத்த வரையில் பல விசயங்களை அனுபவபூர்வமாக ஆராய்ந்து பலன் அல்லது பதில் சொல்ல வேண்டும் ஏனென்றால் நம்மை நாடி வருபவர்கள் நம்மை தெய்வத்தின் தூதுவனாக எண்ணிக்கொண்டு வருவார்கள் நாம் அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் கொடுக்கவில்லை என்றால் .நாம் அந்த இடத்தில் மிகவும் அந்தஸ்தான ஒரு இடத்தில் நிச்சயமாக இருக்க முடியாது ஆகவே மாந்திரீகத்தை பொறுத்த வரையில் அனுபவம் ரொம்ப முக்கியம் .ஒரு சில விசயங்களை ஆராய்ந்து அது நோயா பேயா என்று துல்லியமாக கூற வேண்டும் அவன் தான் உண்மையான மாந்திரீகன் .

கீழே நிறையபேர்கள் எங்களிடம் கேட்கும் கேள்விகளை உங்களுக்கு கொடுக்கிறேன் அதற்கு நாங்கள் சரியான முறையில் பூஜை முறைகளை செய்து வெற்றி கண்டுள்ளோம் .

1.      கொடுத்த கடன் வசூல் ஆகவில்லை அதற்கு என்ன யந்திரம் போடவேண்டும் இல்லைஎன்றால் அதற்கான தாந்திரீக வழிகள் ஏதேனும் உண்டா?
2.      பக்கத்து நிலத்திற்கு சொந்தக்காரன் என் வாசல் நோக்கி ஒரு சாமி சிலையை வைத்து விட்டார் அதற்கு என்ன செய்வது ?

3.      வியாபாரமே இல்லை என்ன செய்வது ?விற்றாலும் கடன்தான் போகிறது பணம் கைக்கு வருவதில்லை ?

4.      பேய் உடலில் இருக்கிறதா இல்லையா என்று கண்டுபிடிப்பது எப்படி?

5.      நாளுக்கு நாள் உடல் இளைத்து கொண்டே போகிறது அடிக்கடி தலைசுற்றல் வருகிறது அதற்கு காரணம் என்ன அவர் உடம்பில் என்ன உள்ளது?

6.      சென்ற இடமெல்லாம் தோழில் கிடைக்க வேலை வாய்ப்புகள் தேடி வர என்ன யந்திரம் போடலாம் ?

7.      கடலில் மீன் பிடிப்பவர்களுக்கு அதிகமான மீன் அகப்பட என்ன யந்திரம் கொடுக்க வேண்டும் ?

8.      சாமி அருள் வந்து ஆடும் பொது அதை நிறுத்துவது எப்படி ?

9.      கண்திருஷ்டி பிரச்சனைகளுக்கு என்ன செய்வது?

10.  குழந்தைகள் திடீரென்று பயந்து அழுகிறார்கள் ,வாந்தி பேதி வருகிறது மருத்துவரிடம் சென்றால் நோய் ஒன்றும் இல்லை அதற்கு காரணம் என்ன ?

11.  அடிக்கடி தீராத வயிற்று வலி வருகிறது மருத்துவரிடம் சென்றால் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது என்பார் அந்த வயிற்று வலியின் காரணம் என்ன ?

12.  ஒருவருக்கு தன்னுடைய குல தெய்வம் யார் ? அது எங்கிருக்கிறது என்று தெரியாது அதை கண்டுபிடித்து கொடுப்பது எப்படி?

13.  குடுப்பத்தில் அடிக்கடி பிரச்சனைகள் தொல்லைகள் நீங்க எந்த யந்திரம் போட வேண்டும்?

இன்னும் பல விசயங்கள் எங்கள் அனுபவத்தில் கண்டு வருகிறோம்.ஆக இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் தெரிய நமது பயிற்சியில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம் நீங்களும் பலர் போற்றும் வகையில் மரியாதையோடு நடந்து கொள்ளலாம் .